சினிமா செய்திகள்

டி.வி நடிகை கொலையா? + "||" + TV actress killing?

டி.வி நடிகை கொலையா?

டி.வி நடிகை கொலையா?
கேரள டி.வி நடிகை கவிதா எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
கேரளாவை சேர்ந்த பிரபல டி.வி நடிகை கவிதா சில தினங்களுக்கு முன்பு வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது மலையாள டி.வி நடிகர்-நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 35 வயதான கவிதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து மலப்புரம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். தனது 4 வயது மகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து இருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் அவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். கவிதா தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கருதப்பட்டது. தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கவிதாவின் கணவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.