சினிமா செய்திகள்

அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் புகைப்படம் வெளியீடு + "||" + Rajini's photo release in the US

அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் புகைப்படம் வெளியீடு

அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் புகைப்படம் வெளியீடு
அமெரிக்கா சென்றுள்ள ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. #RajiniKanth
சென்னை,

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் அங்கு 2 வாரங்கள் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக பெயர் மாற்றிய ரஜினி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார். மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.  சமீபத்தில் ஓய்வெடுப்பதற்காகவும், குழப்பங்களிலிருந்து விடுபடவும் இமயமலைக்குச் சென்ற ரஜினி திரும்பிய பின் தனது மன்ற நிர்வாகிகளின் நியமனம் தொடர்பாக தனது மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து பணிகளை மேற்கொண்டார்.

ஏப்ரல் மாதத்தில் ரஜினி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், தற்போதைக்கு ரஜினிகாந்த் அது பற்றிய அறிவிப்பை வெளியிடும் முடிவை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தற்போது தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.  இந்நிலையில், அவரது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் ‘காலா' படத்தில் அணிந்திருக்கும் கண்ணாடியை போட்டபடி உள்ள ரஜினியின் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. 'காலா' பட ரிலீஸுக்குள் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.