சினிமா செய்திகள்

நடுரோட்டில் வைத்து பாலியல் தொல்லை கண் கலங்கிய பிரபல நடிகை + "||" + Actress Regina Cassandra shares her molestation story

நடுரோட்டில் வைத்து பாலியல் தொல்லை கண் கலங்கிய பிரபல நடிகை

நடுரோட்டில் வைத்து பாலியல் தொல்லை கண் கலங்கிய பிரபல நடிகை
கடந்த சில மாதங்களாக பிரபல நடிகைகள் தானாகவே முன் வந்து தங்களுக்கு நேர்ந்த, பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
தமிழில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கேசன்ரா, தொடர்ந்து அழகிய அசூரா,  பஞ்சாமிர்தம்,கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம்,சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.  தற்போது கவுதம் கார்த்திக்குடன் மிஸ்டர் சந்திர மவுலி படத்தில் நடித்து வருகிறார் 

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் பல்வேறு படங்கள் நடித்துள்ள  ரெஜினா கேசன்ரா. தன்னுடைய வாழ்வில் நடந்த மிகவும் கசப்பான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு நாள் நான் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர்  பாலத்தில் நண்பர்கள் சிலருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன்.  அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீர் என தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டதாகவும் அந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் இருந்து மீள எனக்கு சில நிமிடம் ஆனது என்றும், பின் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தனக்கு தெரிந்து அத்தனை கெட்டவார்த்தைகளாலும் திட்டினேன்.

இதே போல் எனக்கு பல முறை நிகழ்ந்துள்ளது. இதற்காக நான் அழுதது மட்டும் இன்றி அவர்களை கண்டித்து அடித்தும் உள்ளேன் என கண்கள் கலங்கியபடி கூறியுள்ளார் ரெஜினா.


தொடர்புடைய செய்திகள்

1. எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி
புதிதாக ஒரு செய்தி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
2. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth
3. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது? வலைதளத்தில் ஏற்றுவது யார்?
தமிழ்சினிமா உலகையே நடுங்க வைக்கும் தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
4. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை
மேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.
5. நொளம்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 சிறுவர்கள் கைது
நொளம்பூரில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.