சினிமா செய்திகள்

விமல்-ஓவியா ஜோடியுடன்‘களவாணி-2-ம் பாகம் தொடங்கியது + "||" + Kalavani Movie Part 2 started

விமல்-ஓவியா ஜோடியுடன்‘களவாணி-2-ம் பாகம் தொடங்கியது

விமல்-ஓவியா ஜோடியுடன்‘களவாணி-2-ம் பாகம் தொடங்கியது
விமல்-ஓவியா ஜோடியாக நடிக்கும் ‘களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில், மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், ‘களவாணி.’ இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடித்து இருந்தார். கதாநாயகியாக ஓவியா நடித்தார். சற்குணம் டைரக்‌ஷனில், நசீர் தயாரித்து இருந்தார்.

படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்ததால், ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். அதன்படி, ‘களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் மீண்டும் விமல்-ஓவியா ஜோடியே, கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்கள். ‘களவாணி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இரண்டாம் பாகத்தையும் டைரக்டு செய்கிறார்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், அதே கதையாக இல்லாமல், வேறு ஒரு கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்க இருந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ‘களவாணி-2’-ம் பாகத்தை உடனடியாக தொடங்கினார்கள். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. 

ஆசிரியரின் தேர்வுகள்...