சினிமா செய்திகள்

ஊர்வலமாக போவது போல் நடிகர் விஜய் படம், இணையதளத்தில் வெளியானது + "||" + Actor Vijay's film was released on the website

ஊர்வலமாக போவது போல் நடிகர் விஜய் படம், இணையதளத்தில் வெளியானது

ஊர்வலமாக போவது போல்
நடிகர் விஜய் படம், இணையதளத்தில் வெளியானது
நடிகர் விஜய் ஊர்வலமாக போவது போன்ற படம் இணையதளத்தில் வெளியானது.
விஜய் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக ராதாரவி நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்றது.

படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில், இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுடன், ‘பைக்’கில் விஜய் ஊர்வலமாக போவது போல் ஒரு காட்சியை படமாக்கினார்கள்.

அந்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து, இணையதளத்தில் வெளியிட, அது ‘வைரலாக’ உலா வருகிறது. அதைப்பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
2. ‘‘நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட திட்டமா?’’ ‘லஞ்சம்-ஊழலை ஒழிப்பேன்’ என்று படவிழாவில் பரபரப்பு பேச்சு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்–கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
3. நெருக்கடி ஏற்பட்டா ஒருத்தன் வருவான், அவன் லீடரா மாறுவான், அவன் தான் தலைவன்- நடிகர் விஜய்
நெருக்கடி ஏற்பட்டா ஒருத்தன் வருவான், அவன் லீடரா மாறுவான், அவன் தான் தலைவன் என சர்கார் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேச்சியுள்ளார். #ActorVijay #sarkar
4. சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய்
இங்கிலாந்தில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற நிறுவனத்தால் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது வழங்கும் தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.
5. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி
மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.