சினிமா செய்திகள்

படப்பிடிப்பில், சமந்தா பிறந்தநாள் கொண்டாட்டம் + "||" + Samantha birthday celebration

படப்பிடிப்பில், சமந்தா பிறந்தநாள் கொண்டாட்டம்

படப்பிடிப்பில், சமந்தா பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகை சமந்தா படப்பிடிப்பின்போது தனது 31-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.
திருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார், நடிகை சமந்தா. திருமணத்துக்கு பிறகு அவர் கதாநாயகியாக நடித்த ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதைத்தொடர்ந்து ‘நடிகையர் திலகம்’, ‘சீமராஜா’, ‘சூப்பர் டீலக்ஸ்,’ தமிழ்-தெலுங்கில் தயாராகும் ‘யு டர்ன்’ ஆகிய படங்களில் சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், படப்பிடிப்பின்போது தனது 31-வது பிறந்தநாளை நடிகை சமந்தா உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார். படப்பிடிப்பின்போதே ‘கேக்’ வெட்டும் நிகழ்ச்சிக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்து, சமந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆதி பினிஷெட்டி, டைரக்டர் பவன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சமந்தாவுக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.