சினிமா செய்திகள்

சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார் + "||" + Cinema costumes Auction will take place Akshay Kumar

சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார்

சினிமா உடைகளை ஏலம் விடும் அக்‌ஷய்குமார்
நடிகர்-நடிகைகள் பலர் தங்கள் உடைமைகளில் ஏதேனும் ஒன்றை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
டிகர்-நடிகைகள் பலர் தங்கள் உடைமைகளில் ஏதேனும் ஒன்றை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை ஹன்சிகா, தான் வரைந்த ஓவியங்களை ஏலம் விட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

நடிகர் அக்‌ஷய் குமார் இந்தியில் ‘ருஸ்டம்’ படத்தில் நடித்த போது அணிந்த உடைகளை ஏலத்துக்கு கொண்டு வரப்போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்தன. அதனை டுவிட்டரில் தற்போது உறுதிப்படுத்தி கருத்து பதிவிட்டுள்ளார். ருஸ்டம் படம் 2016-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் அக்‌ஷய்குமார் கப்பல் படை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் முழுக்க இந்திய கடற்படை அதிகாரிகள் அணியும் சீருடையை அணிந்து வந்தார். அந்த ஆடையைத்தான் ஏலம் விடப்போகிறார்.

இந்த தகவலை அக்‌ஷய்குமாரின் மனைவியும் நடிகையுமான டுவிங்கிள் கண்ணாவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஆதரவு திரட்டி உள்ளார்.

இதுகுறித்து அக்‌ஷய்குமார் கூறும்போது, “சில விஷயங்கள் நமது மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடும். அப்படித்தான் நான் நடித்து இருந்த ‘ருஷ்டம்’ படமும் என்னை ஈர்த்தது. அந்த படத்தில் கப்பல் படை அதிகாரியாக நான் நடித்து இருந்த கதாபாத்திரம் தேசிய விருது பெற்ற உணர்வை ஏற்படுத்தியது.

எனவே அதில் அணிந்து இருந்த உடைகளை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை விலங்குகள் பாதுகாப்புக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க இருக்கிறேன்” என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...