சினிமா செய்திகள்

பெயர் பதிவு செய்யப்பட்டது ஸ்ரீதேவி வாழ்க்கை ஆவணப்படமாக தயாராகிறது + "||" + Sridevi is preparing life as a documentary

பெயர் பதிவு செய்யப்பட்டது ஸ்ரீதேவி வாழ்க்கை ஆவணப்படமாக தயாராகிறது

பெயர் பதிவு செய்யப்பட்டது ஸ்ரீதேவி வாழ்க்கை ஆவணப்படமாக தயாராகிறது
பெயர் பதிவு செய்யப்பட்டது ஸ்ரீதேவி வாழ்க்கை ஆவணப்படமாக தயாராகிறது
பெயர் பதிவு செய்யப்பட்டது ஸ்ரீதேவி வாழ்க்கை ஆவணப்படமாக தயாராகிறது

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. அவரது குழந்தை பருவம், சினிமாவில் கதநாயகியாக அறிமுகமானது, இந்தி பட உலகுக்கு சென்று முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த போனி கபூரை தாயின் எதிர்ப்பை மீறி மணந்தது போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த படத்தில் கொண்டு வருகிறார்கள்.

பட வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. இந்த படத்தை ஹன்சல் மேத்தா டைரக்டு செய்கிறார். இதில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க வித்யாபாலனை பரிசீலித்து வருகிறார்கள். வித்யாபாலன் ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கை படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மற்றும் இந்தி நடிகர்கள் வேடங்களுக்கும் நட்சத்திர தேர்வு நடக்கிறது.

இதற்கிடையில் ஸ்ரீதேவியின் சாதனைகளை அவரது கணவர் போனிகபூர் ஆவணப்படமாக தயாரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார். இந்த படத்துக்காக ஸ்ரீ, ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீமாம் ஆகிய மூன்று பெயர்களை இந்தி தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் பதிவு செய்து இருக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...