சினிமா செய்திகள்

நடிகை ஓவியாவுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்? + "||" + Rs 50 lakh salary for actress Oviya

நடிகை ஓவியாவுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்?

நடிகை ஓவியாவுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்?
களவாணி, மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு, யாமிருக்க பயமே என்று தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலபடுத்தியது.
நடிகை ஓவியாவுக்கு ரூ.50 லட்சம் சம்பளம்?

களவாணி, மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு, யாமிருக்க பயமே என்று தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலபடுத்தியது. அதில் ‘ஷட்டப் பண்ணுங்க ஸ்பிரே அடிச்சிடுவேன், பசிக்குது ஒரே ஒரு வாழைப்பழம் கொடுங்கள் என்றெல்லாம் அவர் பேசியதை ரசிகர்கள் இப்போதும் மீம்ஸ்களாக பயன்படுத்துகின்றனர்.

ஓவியா ஆர்மி என்று சமூக வலைத்தள பக்கத்தை உருவாக்கி அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிடுகின்றனர். தற்போது காஞ்சனா 3-ம் பாகத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்கிறார். மேலும் 3 படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார். டி.கே இயக்கும் ‘காட்டேரி’ என்ற படத்தில் ஓவியா நடிப்பதாக தகவல் வெளியாகி பின்னர் அதில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. அவருக்கு பதிலாக ஆத்மிகா நடிக்கிறார்.

அந்த படத்தில் நடிக்க ஓவியாவுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாகவும் பிறகு அவர் ரூ.50 லட்சம் என்று சம்பளத்தை உயர்த்தியதால் அவரை மாற்றி விட்டதாகவும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓவியா தரப்பிலோ முதலில் ஓவியா மட்டுமே கதாநாயகி என்று கூறிவிட்டு பிறகு அவரது முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் இன்னொரு கதாநாயகியை தேர்வு செய்ததால் படத்தில் இருந்து அவர் விலகியதாக கூறினர்.