சினிமா செய்திகள்

எனக்கு ரகசிய திருமணமா? -பிரியங்கா சோப்ரா + "||" + Can i have a secret wedding? -Prirangha Chopra

எனக்கு ரகசிய திருமணமா? -பிரியங்கா சோப்ரா

எனக்கு ரகசிய திருமணமா? -பிரியங்கா சோப்ரா
தனக்கு ரகசிய திருமணம் நடந்ததா என பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்தார்.

விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் ரூ.8 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். தற்போது சல்மான்கானுடன் பாரத் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படமொன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.


அந்த படத்தில் தனது கையில் அவர் தாலி கட்டி இருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். பிரியங்கா சோப்ராவுக்கு ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாக பரபரப்பான பேச்சு கிளம்பியது. எனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும், மாப்பிள்ளை முடிவானதும் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

எனவே பிரியங்காவுக்கு வெளிநாட்டில் ரகசியமாக திருமணம் நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், “நான் கையில் கட்டி இருந்தது தாலி இல்லை. திருஷ்டி கழிக்கும் பாசி. என்னுடைய திருமணம் ரகசியமாக நடக்காது” என்று கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...