சினிமா செய்திகள்

நயன்தாராவின் பயத்தை போக்கினார், சமந்தா! + "||" + Nayantara fears

நயன்தாராவின் பயத்தை போக்கினார், சமந்தா!

நயன்தாராவின் பயத்தை போக்கினார், சமந்தா!
நடிகை நயன்தாரா தனது அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார்.
நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு ரொம்பவே யோசிக்கிறார். ஒரு பிரபல கதாநாயகன் அளவுக்கு ‘மார்க்கெட்’ உருவாகி விட்டதால், இந்த எச்சரிக்கை. தென்னிந்திய திரையுலகின் முதன்மை கதாநாயகி என்ற அந்தஸ்துடன் இருக்கும் அவர், அந்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார். வருகிற பட வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்பதில்லை. தனக்கு பொருந்துகிற கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

அவர் இப்படி கதைகளை தேர்வு செய்து நடிப்பதால், “நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்” என்று செய்தி பரவுகிறது. அதை நிரூபிப்பது போலவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் காதலை ஒவ்வொரு மேடையிலும் உறுதி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஒருவரையொருவர் புகழ்ந்து வருகிறார்கள். வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றிய படங்களை சமூகவலை தளங்களில் பதிந்தார்கள்.

நயன்தாராவின் ஒரே பயம், திருமணம் செய்து கொண்டால், ‘மார்க்கெட்’ போய்விடுமோ என்பதுதான். முதன்மை கதாநாயகி என்ற அந்தஸ்தையும், ரூ.5 கோடி சம்பளத்தையும், திருமண வாழ்க்கை இழக்க செய்து விடுமோ என்று அவர் அஞ்சுகிறார். அவருடைய பயத்தை சமந்தா போக்கியிருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தாவுக்கு ‘மார்க்கெட்’ இறங்கி விடவில்லை. அவரை தேடி புது பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரிய கதாநாயகர்களின் ஆதரவு இன்னமும் சமந்தாவுக்கு இருக்கிறது.

இது, நயன்தாராவுக்கு ஓரளவு தெம்பை கொடுத்து இருக்கிறது. நம்பிக்கையை தந்து இருக்கிறது. எனவே விக்னேஷ் சிவனை நயன்தாரா மிக விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

ஆசிரியரின் தேர்வுகள்...