சினிமா செய்திகள்

சினிமாவில் நடிக்க முடியுமா? - அபிஷேக்பச்சன் + "||" + Can act in cinema? - Abhishek Bachchan

சினிமாவில் நடிக்க முடியுமா? - அபிஷேக்பச்சன்

சினிமாவில் நடிக்க முடியுமா? - அபிஷேக்பச்சன்
ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க தயங்கியதாக அபிஷேக்பச்சன் கூறினார்.

காதல் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யாராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் ஆரத்யா என்ற பெண்குழந்தை உள்ளது. இப்போது ஐஸ்வர்யாராய் அதிக படங்களில் நடித்து வருகிறார். அபிஷேக் பச்சனுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது. இருவருக்கும் சமீப காலமாக நல்ல புரிதல் இல்லை என்றும், வீட்டில் தனித்தனியாக வசிக்கிறார்கள் என்றும் தகவல்கள் வந்தன. ஐஸ்வர்யாராயுடன் மாமியார் ஜெயாபச்சனும் அடிக்கடி தகராறு செய்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் கைகோர்த்தபடி ஜோடியாக கலந்துகொண்டு எங்களுக்குள் தகராறு எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க தயங்கியதாக அபிஷேக்பச்சன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-


ஆரத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய்க்கு சினிமாவில் தொடர முடியுமா என்ற தயக்கம் ஏற்பட்டது. முன்பு போல் என்னால் மீண்டும் நடிக்க முடியுமா? ஏற்கனவே விட்ட இடத்தை திரும்பவும் பிடிக்க முடியுமா? பாராட்டுகள் கிடைக்குமா என்றெல்லாம் சந்தேகங்களை கிளப்பினார். நான் இரண்டு ஆண்டுகள் நடிக்காமல் இருந்தேன். ஐஸ்வர்யாராயும், எனது பெற்றோர்களும் எனது உணர்வுகளை புரிந்துகொண்டு ஆதரவாக இருந்தார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்
முசிறியில் 11 குழந்தைகள் பெற்ற கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
2. திண்டுக்கல்லில்: மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, பள்ளி மாணவன் சாவு
திண்டுக்கல்லில் மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை, 7-ம் வகுப்பு மாணவன் ஆகியோர் பலியாகினர்.
3. வள்ளியூர், இடிந்தகரையில் பரிதாபம்: மர்ம காய்ச்சலுக்கு குழந்தை-பெண் பலி
வள்ளியூர் மற்றும் இடிந்தகரையில் மர்ம காய்ச்சலுக்கு 1½ வயது குழந்தையும், ஒரு பெண்ணும் பரிதாபமாக இறந்தனர்.
4. “ஐஸ்வர்யாராய்க்கே பாலியல் சீண்டல்” - பாடகி சின்மயி
ஐஸ்வர்யாராய்க்கே பாலியல் சீண்டல் நடந்ததாக பாடகி சின்மயி தெரிவித்தார்.
5. ‘மீ டூ’ இயக்கத்துக்கு ஐஸ்வர்யாராய் ஆதரவு
‘மீ டூ’ இயக்கத்தை ஐஸ்வர்யாராய் வரவேற்று உள்ளார்.