சினிமா செய்திகள்

ஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் - நடிகை பார்வதி + "||" + The disappointment that the president can not be awarded - actress Parvathi

ஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் - நடிகை பார்வதி

ஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் - நடிகை பார்வதி
ஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் அளிப்பதாக நடிகை பார்வதி கூறினார்.

டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா சர்ச்சையில் முடிந்தது. 12 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்கினார். மற்றவர்கள் மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இராணி, ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஆகியோரிடம் இருந்து விருதுகளை பெற்றனர். இது விருது பெற வந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனால் 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள பார்வதி ‘டேக் ஆப்’ என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். டெல்லி சென்று இருந்த பார்வதிக்கும் இது ஏமாற்றத்தை அளித்தது.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஜனாதிபதி கையால் தேசிய விருது பெறுவது கவுரவமானது. மகிழ்ச்சி அளிக்க கூடியது. முதல் முறையாக விருது பெறுபவர்கள் மிகவும் ஆவலுடன் வந்து இருந்தார்கள். ஆனால் ஜனாதிபதி அனைவருக்கும் தனது கையால் விருது வழங்காதது ஏமாற்றத்தை அளித்தது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. மதன்லால் குரானா மரணம்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
மதன்லால் குரானா மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
2. கதாபாத்திரத் தேர்வில் வெற்றி காணும் பார்வதி
பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளில் பாலிவுட்டில் வித்யாபாலன், தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா, பார்வதி ஆகியோர் முக்கியமானவர்கள்.
3. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். #Vajpayee #RIPVajpayee
4. சமூக வலைத்தளத்தில் இருந்து விலகிய பார்வதி
நடிகை பார்வதி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.
5. சோம்நாத் சட்டர்ஜி மறைவு: ஜனாதிபதி- பிரதமர் இரங்கல்
சோம்நாத் சட்டர்ஜி மறைவவையொட்டி ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #SomnathChatterjee #RIP