சினிமா செய்திகள்

11-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் + "||" + Ilayaraja, AR Rahman in the 11th grade Tamil book

11-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்

11-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்
11-ம் வகுப்பு சிறப்பு தமிழ் புத்தகத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். #IlayaRaja #ARRahman
சென்னை,

11-ம் வகுப்பு சிறப்பு தமிழ் புத்தகத்தில், "இசைத்தமிழர் இருவர்" என்ற தலைப்பில், இசையமைப்பாளர்கள்  இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம்  பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் பள்ளிப் பாடத்திட்ட நூல்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நூல்களை கடந்த 4-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்.


1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகின. இதில், 11-ம் வகுப்புக்குரிய ‘பொது தமிழ்’ பாடப்புத்தகத்தில் 'இசைத் தமிழர் இருவர்' என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளது.

'சிம்பொனி தமிழர்' என்ற பெயரில் திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா குறித்த பாடமும் 'ஆஸ்கர் தமிழர்' என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளன.