சினிமா செய்திகள்

இணையதளத்தில் ஆபாச படம்நடிகை நிவேதா பெத்துராஜ் ஆவேசம் + "||" + Actress Nivedha Pethuraj Furious

இணையதளத்தில் ஆபாச படம்நடிகை நிவேதா பெத்துராஜ் ஆவேசம்

இணையதளத்தில் ஆபாச படம்நடிகை நிவேதா பெத்துராஜ் ஆவேசம்
சமூக வலைத்தளங்களில் வெளியான படம் குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் ஆவேசமடைந்துள்ளார்.
தினேசுடன் ஒரு நாள் கூத்து உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம் படங்களில் நடித்து பிரபலமான நிவேதா பெத்துராஜ் அடுத்து டிக் டிக் டிக் படத்தில் ஜெயம்ரவியுடன் ஜோடி சேர்ந்தார். பார்ட்டி, திமிரு பிடிச்சவன், ஜகஜால கில்லாடி படங்களும் அவர் கைவசம் உள்ளன.

சில தினங்களுக்கு முன்பு நிவேதா பெத்துராஜ் நீச்சல் உடையில் ஆபாசமாக போஸ் கொடுப்பது போன்ற படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் நிவேதா பெத்துராஜை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். மும்பை நடிகைகள் போன்று ஆபாச படத்தை துணிச்சலாக வெளியிட்டு இருப்பதாக சிலர் பாராட்டவும் செய்தனர்.

இந்த நிலையில் நீச்சல் உடையில் இருப்பது பெத்துராஜ் அல்ல என்றும் அது ஒரு மாடல் அழகி என்றும் தெரியவந்தது. ஆனாலும் தொடர்ந்து அந்த படம் நிவேதா பெத்துராஜ் பெயரிலேயே சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஒரு நடிகையின் படம் எனது பெயரில் வெளிவந்துள்ளது. அது நான்தான் என்று பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. என் மீது அக்கறை கொண்டவர்கள் இதுகுறித்து எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். இந்த செயல் கவனக்குறைவாக நடந்ததாக தெரியவில்லை. என்பெயரை கெடுக்கும் நோக்கில் யாரோ இந்த சதிசெயலை செய்துள்ளனர்.

இது என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உள்ளது. இந்த போக்கு தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.”

இவ்வாறு நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...