சினிமா செய்திகள்

தேசிய விருது பெற்ற நடிகையான பார்வதி விபத்தில் சிக்கினார் + "||" + National Film Award-winning Mollywood actress Parvathy met road accident in Alappuzha

தேசிய விருது பெற்ற நடிகையான பார்வதி விபத்தில் சிக்கினார்

தேசிய விருது பெற்ற  நடிகையான பார்வதி  விபத்தில் சிக்கினார்
தேசிய விருது பெற்ற நடிகையான பார்வதி கார் விபத்தில் சிக்கி உள்ளார். #Parvathy #NationalFilmAward
ஆலப்புழா

மலையாள படத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி மேனன் . இவர் டேக் ஆப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்து உள்ளது.

நடிகை பார்வதி  தமிழில் மரியான் , பூ , சென்னையில் ஒரு நாள், உத்தம் வில்லன், ஆகிய படங்களில் நடித்து உள்ளார். 

இந்நிலையில், நடிகை பார்வதி சென்ற கார் விபத்தில் சிக்கியது. நேற்று ஆலப்புழா அருகே கொம்முடி தேசிய நெடுஞ்சாலையில் நடிகை பார்வதி சென்ற கார் மீது இன்னொரு கார் மோதியது

அதிர்ஷ்டவசமாக இதில் பார்வதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஆலப்புழா போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.