சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் சம்பளம் உயர்ந்தது + "||" + Keerthi Suresh's salary rose

கீர்த்தி சுரேஷ் சம்பளம் உயர்ந்தது

கீர்த்தி சுரேஷ் சம்பளம் உயர்ந்தது
கீர்த்தி சுரேஷ் சம்பளம் உயர்ந்துள்ளது.
கீர்த்தி சுரேசுக்கு தமிழ், தெலுங்கு பட உலகில் மளமளவென வாய்ப்புகள் குவிந்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். முன்னாள் கதாநாயகி மேனகா மகளான இவர் 2015-ல் வெளிவந்த இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார். இதில் நடிக்க அவருக்கு சில லட்சங்களே சம்பளமாக கிடைத்தது.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த ரஜினிமுருகன் படத்தின் வெற்றி அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடரி, ரெமோ ஆகிய படங்களில் வந்த அவர் பின்னர் பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியானார். அதன்பிறகு தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்போது மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநாதி பெயர்களில் தயாராகி உள்ள படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்துள்ளார். விஷாலின் சண்டக்கோழி-2, விக்ரமுடன் சாமி-2 படங்களில் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் விஜய் ஜோடியாக நடிக்கிறார். படங்கள் குவிவதால் இதுவரை ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் அதை ரூ.1.50 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.