சினிமா செய்திகள்

ரன்பீர் கபூர்-அலியாபட் காதல் + "||" + Ranbir Kapoor-Alia Bhat love

ரன்பீர் கபூர்-அலியாபட் காதல்

ரன்பீர் கபூர்-அலியாபட் காதல்
ரன்பீர் கபூருக்கும், இந்தி நடிகை அலியாபட்டுக்கும் இடையே புதிதாக காதல் மலர்ந்துள்ளது.
ந்தி திரையுலக பழம்பெரும் நட்சத்திர தம்பதியான ரிஷிகபூர்-நீட்டுசிங் மகன் ரன்பீர் கபூர். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். ரன்பீர் கபூருக்கும், இந்தி நடிகை கத்ரினா கைப்புக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

அதன்பிறகு ஒருவரையொருவர் பார்ப்பதை தவிர்த்து வந்த இருவரும் அனுஷ்கா சர்மா-விராட் கோலி திருமணத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. இருவரும் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு மீண்டும் காதல் மலரும் என்று கணித்த நிலையில் காதல் முறிந்தது முறிந்ததுதான் என்ற ரீதியில் விலகி விட்டனர்.

இந்த நிலையில் ரன்பீர் கபூருக்கும், இந்தி நடிகை அலியாபட்டுக்கும் இடையே புதிதாக திடீர் காதல் மலர்ந்துள்ளது. ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்த இருவரும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த நடிகை சோனம் கபூர் திருமணத்தில் ஜோடியாக கைகோர்த்து வந்து காதலை உறுதிப்படுத்தி உள்ளனர்.

அலியா பட் பிரபல இந்தி இயக்குனரும், தயாரிப்பாளருமான மகேஷ்பட்டின் மகள் ஆவார். ரன்பீர் கபூர்-அலியாபட் காதல் விவகாரம் இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

ஆசிரியரின் தேர்வுகள்...