சினிமா செய்திகள்

இணையதளத்தில் நடிகையின் ஆபாச படத்தை வெளியிட்ட இயக்குனர் + "||" + The actress's porn picture Published Director

இணையதளத்தில் நடிகையின் ஆபாச படத்தை வெளியிட்ட இயக்குனர்

இணையதளத்தில் நடிகையின் ஆபாச படத்தை வெளியிட்ட இயக்குனர்
நடிகையை நிர்வாண படம் எடுத்து, இயக்குனர் ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வீதிக்கு வந்து போராடியதால் இந்திய திரையுகமே பரபரப்பானது. ஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான் என்று அவருக்கு சிலர் ஆதரவாகவும் பொய் சொல்கிறார் என்று சில நடிகைகள் எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.

தெலுங்கு நடிகர் சங்கம் புதிய குழுவை நியமித்து நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தொடங்கி உள்ளது. தமிழ் பட உலகிலும் நடிகைகள், பெண் இயக்குனர்கள் உள்ளிட்டோர் சேர்ந்து பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் ஒருவர் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த நடிகையை நிர்வாணமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தி பட உலகில் நடந்துள்ளது.

அந்த நடிகையின் பெயர் அவந்திகா. இவர் சில இந்தி படங்களில் நடித்துள்ளார். விளம்பரங்களில் மாடலாகவும் வருகிறார்.

அவந்திகாவின் நிர்வாண படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது நிர்வாண படத்தை பார்த்து அவந்திகாவும் அதிர்ந்து போனார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“என்னை ஒரு இணையதள தொடரில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தனர். அதன் இயக்குனர் நிர்வாணமாக என்னை போட்டோ எடுக்க வேண்டும் என்றார். நான் அதற்கு சம்மதித்து போஸ் கொடுத்தேன். அதன்பிறகு எனக்கு தெரியாமல் அந்த நிர்வாண படத்தை இணையதளத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். நான் தற்போது லக்னோவில் இந்தி படமொன்றில் நடித்து வருகிறேன். மும்பை திரும்பியதும் இயக்குனர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார். 

ஆசிரியரின் தேர்வுகள்...