சினிமா செய்திகள்

இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு + "||" + Rajinikanth meets with youth team secretaries

இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Rajinikanth
சென்னை,

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கோவையில் மாநாடு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். இந்நிலையில், இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இளைஞரணி செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் 33 பேர் பங்கேற்றனர். இதில் இளைஞர் அணியினர் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் எனவும்  ஒழுக்கமாக இருந்தால், மக்கள் மன்றத்தில் பொதுமக்கள் இணைவார்கள் எனவும் ரஜினி அறிவுறுத்தியதாக நீலகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல் கூறினார்.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து இளைஞரணி செயலாளர்களிடம் ரஜினி கேட்டறிந்ததாகவும், விரைவில் மகளிர் அணியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கலைத்துறையில் மட்டுமே உள்ளார்; அரசியலுக்கு ரஜினிகாந்த் இன்னும் வரவில்லை கி.வீரமணி பேட்டி
ரஜினிகாந்த் அரசியலுக்கு இன்னும் வரவில்லை. கலைத்துறையில் மட்டுமே உள்ளார் என கி.வீரமணி கூறினார்.
2. சென்னையில் ரஜினிகாந்த் - திருமாவளவன் - திருநாவுக்கரசர் சந்திப்பு
சென்னையில் ரஜினிகாந்த் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார்.
3. ‘ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது’ ஆர்.எம்.வீரப்பன் பேட்டி
ரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
4. ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
5. முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...