சினிமா செய்திகள்

நடிகையை 2-வது திருமணம் செய்த இசையமைப்பாளர் + "||" + Actress is the 2nd marriage Visual Composer

நடிகையை 2-வது திருமணம் செய்த இசையமைப்பாளர்

நடிகையை 2-வது திருமணம் செய்த இசையமைப்பாளர்
ஹிமேஷ் ரேஷ்மையா இந்தி பட உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.
கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்துக்கும் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்துக்கும் இசையமைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஹிமேஷ் ரேஷ்மையா இந்தி பட உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். பல இந்தி படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆப்ஹா சுரூர் என்ற இந்தி படத்தில் ஹிமேஷ் ரேஷ்மையாவும் ஹன்சிகாவும் ஜோடியாக நடித்து இருந்தனர்.

இந்தி நடிகை சோனியா கபூருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையாவுக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். இந்த நிலையில் இருவரும் திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

ஏற்கனவே ஹிமேஷ் ரேஷ்மையாக்கும் கோமல் என்பவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் விவாகரத்தும் செய்து கொண்டார்கள். பிரிவுக்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை. ஹிமேஷ் ரேஷ்மையாவும் சோனியா கபூரும் நெருக்கமாக பழகிய விவரம் முதல் மனைவிக்கு தெரிந்ததால் தகராறு செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இப்போது சோனியா கபூரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...