சினிமா செய்திகள்

பாலியல் தொல்லையில் சிக்கிய ‘காலா’ பட நாயகி ஹூமா குரேஷி + "||" + Hula Qureshi is the heroine of the movie 'Gala'

பாலியல் தொல்லையில் சிக்கிய ‘காலா’ பட நாயகி ஹூமா குரேஷி

பாலியல் தொல்லையில் சிக்கிய ‘காலா’ பட நாயகி ஹூமா குரேஷி
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வீதிக்கு வந்து போராடியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வீதிக்கு வந்து போராடியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் தனது ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு திரையுலகினரை கதிகலங்க வைத்தார்.

பெண் உரிமை அமைப்புகள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளன. பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க தெலுங்கு நடிகர் சங்கம் குழுக்கள் அமைத்துள்ளது. இந்த நிலையில் காலா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள ஹூமா குரேஷியும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இவர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்ள சென்ற ஹூமா குரேஷி இதுகுறித்து கூறியதாவது:-

“பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டும் அல்ல, எல்லா துறைகளிலுமே இருக்கிறது. நானும் இந்த தொல்லையை சந்தித்து இருக்கிறேன். அதிகாரம் படைத்தவர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். இந்தியாவில் படுக்கைக்கு அழைக்கும் கொடுமையை பற்றி ஒரு பெண் வெளியே சொன்னால் அவரது கேரக்டரை அசிங்கப்படுத்தும் நிலைமைதான் உள்ளது.

ஒரு பெண் தைரியமாக பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்லும்போது அவள் மற்றவர்களிடம் உதவி கேட்கிறாள் என்று அர்த்தம். எனவே அந்த பெண்ணின் கேரக்டரை குறை சொல்வதை விட்டு உதவி செய்ய முன்வர வேண்டும். பெண்களும் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு ஹூமா குரேஷி கூறினார்.