சினிமா செய்திகள்

“ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆசை”-தமன்னா + "||" + desire to act in the role of Sridevi " Tamanna

“ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆசை”-தமன்னா

“ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆசை”-தமன்னா
தமன்னாவுக்கு, துபாயில் குளியலறையில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.
தமன்னாவுக்கு, துபாயில் குளியலறையில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது. தமிழ், இந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கான நடிகர்-நடிகை தேர்வும் நடக்கிறது. ஸ்ரீதேவி கணவர் போனிகபூரும், ஸ்ரீதேவி வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கிறார்.

இந்த நிலையில் ஸ்ரீதேவி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகி வருகின்றன. அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. நானும் அதுபோன்ற வாழ்க்கை வரலாற்று படமொன்றில் நடிக்க ஆசைபடுகிறேன். நடிகை ஸ்ரீதேவி, சானியா மிர்சா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது” என்றார்.

ஏற்கனவே நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் வித்யாபாலன் நடித்து வெளிவந்தது. மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாகி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. நடிகை ஷகிலாவின் வாழ்க்கையும் படமாகி வருகிறது.