சினிமா செய்திகள்

‘சூப்பர் மேன்’ கதாநாயகி மார்கட் கிட்டர் மரணம் + "||" + Death of 'Super Man' heroine Margot Kittur

‘சூப்பர் மேன்’ கதாநாயகி மார்கட் கிட்டர் மரணம்

‘சூப்பர் மேன்’ கதாநாயகி மார்கட் கிட்டர் மரணம்
சூப்பர் மேன் பட கதாநாயகி மார்கட் கிட்டர் மரணம் அடைந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர் திடீர் மரணம் அடைந்தார். இவர் 1968-ல் இருந்து படங்களில் நடித்து வந்தார். 1978-ம் ஆண்டு வெளியான சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உலகம் முழுவதும் பிரபலமானார். அதன்பிறகு பழைய சூப்பர்மேன் படங்களின் அனைத்து பாகங்களிலுமே நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


கடைசியாக இவர் நடிப்பில் ‘த நெய்பர்ஹுட்’ திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. அதில் மார்கட் கிட்டர் கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் குவிந்தன. தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். மார்கட் கிட்டருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மன அழுத்தத்திலும் அவதிப்பட்டார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள வீட்டில் திடீரென்று மரணம் அடைந்தார். இவருக்கு வயது 65. மார்கட் கிட்டர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலக பிரபலங்களும், உலகம் முழுவதும் உள்ள சூப்பர் மேன் படங்களின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...