சினிமா செய்திகள்

மகாபாரதம் படத்தில் சல்மான்கான்? + "||" + Salman Khan in Mahabharata?

மகாபாரதம் படத்தில் சல்மான்கான்?

மகாபாரதம் படத்தில் சல்மான்கான்?
மகாபாரதம் படத்தில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாபாரதம் கதையை ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கின்றனர். இந்த படத்தில் அமீர்கான் நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அவர் அர்ஜுனன் வேடத்தில் நடிப்பதாக கூறுகின்றனர். இதர கதாபாத்திரங்களுக்கு நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது.


தற்போது சல்மான்கானும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பத்மாவத் சரித்திர படத்தில் பத்மாவதியாக வந்த தீபிகா படுகோனேவை மகாபாரதம் படத்தில் திரவுபதி வேடத்தில் நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.

மலையாளத்திலும் மகாபாரதம் கதையை பெரிய பட்ஜெட்டில் படமாக எடுக்கின்றனர். இந்த படத்தில் மோகன்லால் பீமனாகவும், நாகார்ஜுனா கர்ணனாகவும் நடிக்க உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயலால் மாவட்டத்தில் 76 இடங்கள் பாதிக்க வாய்ப்பு கண்காணிப்பு அதிகாரி தகவல்
கஜா புயலால் கரூர் மாவட்டத்தில் பாதிப்படையக்கூடும் என 76 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் கூறினார்.
2. முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க நடவடிக்கை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்
புயல் பாதுகாப்பு முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
3. உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி; தமிழக சுகாதாரத்துறை கின்னஸ் சாதனை அமைச்சர் தகவல்
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதில் தமிழக சுகாதாரத்துறை கின்னஸ் சாதனை புரிந்து உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
4. ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டில் திருத்தம் செய்யலாம் அமைச்சர் தகவல்
ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
5. பெரம்பலூர் மாவட்டத்தில் 19–ந் தேதி வரை பொதுமக்களிடம் வக்கீல்கள் குறைகளை கேட்கிறார்கள் முதன்மை நீதிபதி தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 19–ந் தேதி வரை பொதுமக்களிடம் வக்கீல்கள் குறைகளை கேட்கிறார்கள் என்று மாவட்ட முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் தெரிவித்தார்.