சினிமா செய்திகள்

பிரபல இயக்குனர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சி + "||" + Rajasimha Tadinada – Okka Ammayi Thappa director and Rudhramadevi writer attempts suicide

பிரபல இயக்குனர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சி

பிரபல இயக்குனர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சி
பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா, அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மும்பை

தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளவர் ராஜசிம்ஹா. நடிகை அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் இவர் தான்.

மேலும் நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வெளியான 'ஒக்க அம்மாயி' திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து ராஜசிம்ஹா தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது தடைபட்டு உள்ளது.

இந்நிலையில் இவர், மும்பையில் அதிக அளவில் தூக்கி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் இவரை உடனடியாக மருத்துவனையில் அனுமதித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணையில் சினிமாவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 'ராஜசிம்ஹா' மன அழுத்தத்தில் இருந்ததாகவும். இதனால் திடீர் என இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி
புதிதாக ஒரு செய்தி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
2. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth
3. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது? வலைதளத்தில் ஏற்றுவது யார்?
தமிழ்சினிமா உலகையே நடுங்க வைக்கும் தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
4. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை
மேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.
5. ரஜினியின் 2.0 வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
சர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளனர்.