சினிமா செய்திகள்

முகநூலில் 3 கோடி பின்தொடர்பவர்களுடன் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம் + "||" + Amitabh Bachchan most engaging Indian actor on Facebook

முகநூலில் 3 கோடி பின்தொடர்பவர்களுடன் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம்

முகநூலில் 3 கோடி பின்தொடர்பவர்களுடன் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம்
முகநூலில் அதிகம் பின்தொடர்பவர்களை கொண்ட இந்திய நடிகர்களில் அமிதாப் பச்சன் முதல் இடத்தில் உள்ளார் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. #AmitabhBachchan

மும்பை,

சமூக வலை தளங்களில் ஒன்றான முகநூலில் இந்திய நடிகர்களில் அதிகம் பின்தொடர்பவர்கள், லைக்குகள், ஷேர்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் ஆகியவற்றை கொண்டவர்களை பற்றிய ஆய்வு ஒன்றை ஸ்கோர் டிரெண்ட்ஸ் நடத்தியது.

இந்த ஆய்வில் 75 வயது நிறைந்த நடிகர் அமிதாப் பச்சன் முதலிடத்தில் உள்ளார்.  அவருக்கு 3 கோடி பின்தொடர்வோர் உள்ளனர்.  அவர் 100 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.  அவருக்கு அடுத்து 95 புள்ளிகளுடன் சல்மான் கான் மற்றும் 68 புள்ளிகளுடன் ஷாருக் கான் ஆகியோர் உள்ளனர்.

இதேபோன்று பத்மாவத் பட புகழ் ரன்வீர் சிங் 52 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் மற்றும் 49 புள்ளிகளுடன் அக்ஷய் குமார் 5வது இடத்திலும் உள்ளனர்.

இதுபற்றி ஸ்கோர் டிரெண்ட்சின் இணை நிறுவனரான அஷ்வனி கவுல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பச்சனின் புகழ் முகநூலில் உயர்ந்து வருகிறது.  அதனால் அவரது பதிவுகள் மற்றும் அதிகாரபூர்வ பக்கம் ஆகியவை 100 சதவீதம் பிரபலம் அடைந்துள்ளது.  இது அவருக்கு சாதகம் ஆக உதவியுள்ளது என கூறியுள்ளார்.

தனது பின்தொடர்வோர் எண்ணிக்கையை குறைத்துள்ளது என குற்றச்சாட்டு கூறிய பச்சன் டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன் என கடந்த பிப்ரவரியில் அச்சுறுத்தினார்.  டுவிட்டரில் அவருக்கு 3.44 கோடி பேர் பின்தொடர்வோர் உள்ளனர்.