சினிமா செய்திகள்

படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா + "||" + Pictures fell: Anushka is ready for marriage, Trisha

படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா

படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாராவுக்கு கடும் போட்டியாக வளர்ந்தவர் அனுஷ்கா.
அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் குண்டு பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அதிகமாக சாப்பிட்டு உடல் எடையை கணிசமான அளவு ஏற்றினார். அந்த படம் வெளியான பிறகு உடற்பயிற்சிகள், யோகா, உணவு கட்டுப்பாடு என்று உடம்பை வறுத்தியும் எடை குறையவில்லை.


பாகுபலி–2 படத்தில் கம்ப்யூட்டர் மூலம் உடம்பை ஒல்லியாக மாற்றி இருந்தனர். எடை போட்டதால் அனுஷ்காவுக்கு புதிய படங்கள் இல்லை. அவர் கடைசியாக நடித்த பாகமதி ஜனவரியில் வந்தது. இதனால் அவருக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர் மணமகன் தேடுகிறார்கள். அனுஷ்காவுக்கு இப்போது 36 வயது ஆகிறது. 40, 45 வயதை தாண்டிய டாக்டர், என்ஜினியர், தொழில் அதிபர் வரன்கள் அதிகம் வருகின்றன. யாரையும் அவருக்கு பிடிக்கவில்லையாம்.

சமீபத்தில் கோவில்களுக்கு சென்று திருமண தடை நீங்க பரிகார பூஜைகள் செய்து விட்டு வந்தார். இன்னும் ஓரிரு மாதங்களில் மணமகனை தேர்வு செய்து திருமணத்துக்கு தயார் ஆகிவிடுவார் என்று தெலுங்கு பட உலகினர் சொல்கிறார்கள்.

இதுபோல் 35 வயது நிரம்பி உள்ள திரிஷாவும் திருமணத்துக்கு தயாராகி இருப்பதாக தகவல். சமீபத்தில் இவர் தோழிகளுடன் வெளிநாடு சென்று வந்தார். அப்போது திருமணத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. இவருக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் கிசுகிசுக்கின்றனர். ஆனால் இதுகுறித்து திரிஷா தரப்பில் விசாரித்தபோது மறுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இரண்டாவது சுற்றில் அனுஷ்கா!
தென்னிந்திய கதாநாயகிகளில் பிரபலமான ஒருவராக இருந்த அனுஷ்கா, `இஞ்சி இடுப்பழகி' என்ற படத்துக்காக, உடல் எடையை கூட்டினார்.
2. புதிய படத்தில், அனுஷ்கா தோற்றம்
அனுஷ்காவுக்கு ஒரு வருடமாக தமிழிலும், தெலுங்கிலும் படங்கள் இல்லை.
3. மீண்டும் படங்களில் நடிக்கும் சிம்ரனை பாராட்டிய திரிஷா
தமிழில் 1990–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், ரமணா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
4. திரிஷாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்
திரிஷாவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக திரிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
5. ‘96’ படத்துக்கு எதிராக விஷால் செயல்பட்டாரா? நடிகர் விஜய் சேதுபதி பேட்டி
விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்துள்ள ‘96’ படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை படக்குழுவினர் சென்னையில் நடத்தினார்கள்.