சினிமா செய்திகள்

பாலியல் நகைச்சுவைக்கு சிரித்த பெண்ணியவாதி கங்கானா ரனாவத் + "||" + Feminist Kangana Ranaut termed hypocrite for cracking up on Jim Sarbh's tasteless 'rape' joke at Cannes

பாலியல் நகைச்சுவைக்கு சிரித்த பெண்ணியவாதி கங்கானா ரனாவத்

பாலியல் நகைச்சுவைக்கு சிரித்த பெண்ணியவாதி கங்கானா ரனாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாலியல் வன்கொடுமை குறித்து சக நடிகர் செய்த காமெடியை ரசித்து சிரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகம் வரும் பாலிவுட்டில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து பிரபலமானவர். 

இவர் நடிப்பில் வெளியான குயின் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பல பேட்டிகளில் தன்னை பெண்ணியவாதி என காட்டி கொள்வார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். விழா முடிந்து, சக நடிகர் ஜிம் சர்ப்புடன் சேர்ந்து பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அங்கு, ஜிம் சர்ப் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி நகைச்சுவை ஒன்றைச் செய்துள்ளார். அதை பெண்ணியவாதி என்று கூறிக்கொள்ளும் கங்கனா கண்டிக்காமல், நன்றாக வாய்விட்டு சிரித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாலியல் வன்கொடுமை குறித்து சக நடிகர் செய்த காமெடியை ரசித்து சிரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கத்துவா மற்றும் உன்னோவின் கொடூர சம்பவங்கள் நம் மனதில் இன்னும் ரணமாக இருக்கும்போது, பத்மவாதி நடிகர் ஜிம் சர்ப்  சுவையில்லா  பாலியல் ஜோக்  அடித்தது ரசிக்க முடியவில்லை. அதுவும் கங்கனா ரனாவத்தின்  எதிர்வினையை இன்னும் கோபத்தை தூண்டி உள்ளது.