சினிமா செய்திகள்

சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் முத்த படம் + "||" + Aishwarya Rai kissing photo in controversy

சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் முத்த படம்

சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய்  முத்த படம்
ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் திடீரென்று கணக்கு தொடங்கினார். அதில் தனது படங்களை வெளியிட்டார்.
நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி படங்களையும், நடிக்கும் படங்கள் பற்றிய தகவலையும் வெளியிட்டு பிஸியாக இருக்கும் நிலையில் ஐஸ்வர்யாராய் அதை விட்டு ஒதுங்கியே இருந்தார். ரசிகர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள பயந்து தள்ளி இருப்பதாக கூறப்பட்டது.


இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் திடீரென்று கணக்கு தொடங்கினார். அதில் தனது படங்களை வெளியிட்டார். கேன்ஸ் பட விழாவுக்கு சென்று இருந்தபோது தனது மகள் ஆரத்யாவுக்கு உதட்டில் முத்தமிட்டார். அந்த படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த படம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்வர்யாராயை கண்டித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துகள் பதிவிடுகிறார்கள். ‘‘மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைப்போல் சில இந்தியர்கள் குழந்தைகளுக்கு உதட்டில் எதற்காக முத்தம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இது அசிங்கமாக இருக்கிறது. பல பிரபலங்கள் இப்படித்தான் செய்கிறார்கள்’’ என்று இன்ஸ்டாகிராமில் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

‘‘5, 6 வயது குழந்தையின் உதட்டில் முத்தமிடுவது கேவலமாக உள்ளது’’ என்று ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் கண்டித்துள்ளார். ஐஸ்வர்யாராய் ஆசையாய் வெளியிட்ட மகளின் முத்த படத்தை எதிர்த்து பலரும் கருத்து பதிவிடுவது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.