குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 20 May 2018 6:45 AM GMT (Updated: 20 May 2018 6:45 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, பிரியங்கா சோப்ரா, இலியானா, ராதிகா ஆப்தே, கங்கனா ரணாவத் ஆகிய 4 பேரில், கவர்ச்சி காட்டுவதில் ‘நம்பர்–1’ யார்? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

ராதிகா ஆப்தே! ஒரு படத்துக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கக் கூட தயார் என்று அவர் அறிவித்து இருக்கிறாரே!

***

பழைய படங்களில், பாடலுக்கு சிறந்த முறையில் உதடுகளை அசைத்த கதாநாயகன் யார்? (எஸ்.ராமகிருஷ்ணன், )

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன். இவருக்கு பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தராஜனின் குரல் கச்சிதமாக பொருந்தியிருந்ததால், அவர் பாடுவது போலவே இருக்கும். அந்த அளவுக்கு மிக தத்ரூபமாக சிவாஜிகணேசன் உதடுகளை அசைப்பார்!

***

குருவியாரே, ஹன்சிகாவுக்கும், தன்சிகாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? (டி.ஜேக்கப், அடைக்கலாபுரம்)

ஹன்சிகா, மும்பையை சேர்ந்தவர். தன்சிகா, தமிழ் பெண். ஹன்சிகா, கொஞ்சம் பயந்த சுபாவம். தன்சிகா கம்பெடுத்து சண்டை போடுகிற அளவுக்கு துணிச்சல்காரர்!

***

எம்.ஜி.ஆர். முதன்முதலில் டைரக்டு செய்த படம் எது? (வீ.தனபால், பெண்ணாடம்)

நாடோடி மன்னன்!

***

குருவியாரே, ஒப்பனை செய்து கொள்ளவில்லை என்றால் அனுஷ்கா எப்படியிருப்பார்? (எம்.ஞானராஜ், ராசிபுரம்)

ஒப்பனை இல்லாமலே அழகாக இருக்கும் நடிகைகளில், அனுஷ்காவும் ஒருவர். வீட்டில் இருக்கும்போது அவர் ஒப்பனை செய்து கொள்வதில்லை. இருப்பினும், அவர் அழகாகவே தெரிவார்!

***

காவிரி பிரச்சினையை வைத்து படம் எடுப்பார்களா? (சி.ராஜேந்திரன், டி.கல்லுப்பட்டி)

அதற்கான முயற்சிகளில் ஒரு டைரக்டர் ஈடுபட்டு இருக்கிறார்!

***

குருவியாரே, கடற்கரையில் புடவை கட்டிக் கொண்டா குளிக்க முடியும்? என்று சமந்தா கேட்டு இருக்கிறாரே...? (கே.பிரவீன்குமார், தஞ்சை)

புடவை கட்டிக் கொண்டும் குளிக்க முடியும் என்று சமந்தாவுக்கு தெரியாது போலும்! பாவம்...

***

 நயன்தாராவுடன் அதர்வா நடித்த படம் எப்போது திரைக்கு வரும்? (பி.விக்னேஷ், திண்டுக்கல்)

நயன்தாரா–அதர்வா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அடுத்த மாதம் (ஜூன்) திரைக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது!

***

குருவியாரே, ‘இரும்புத்திரை’ படத்தில், விஷால்–சமந்தா காதல் காட்சியில் நெருக்கம் எப்படி? (இரா.சவுந்தர், பர்கூர்)

‘‘இது, போதாது...இன்னும் இளமையான ஒரு கதாநாயகியை வைத்து, இதை விட நெருக்கமாக காதல் காட்சிகளை படமாக்கி இருக்கலாம் என்கிறார்கள், ரசிகர்கள்!

***

இந்திரா காந்தி வேடத்தில், வித்யாபாலன் நடிப்பது உண்மையா? (கே.சுப்பிரமணியம், பேராவூரணி)

அப்படி ஒரு படம் தயாராவதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்போடு அது நின்று விட்டது!

***

குருவியாரே, நகை கடை, ஜவுளி கடை ஆகிய இரண்டில், நடிகைகளுக்கு எந்த கடை விளம்பரத்துக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது? (மு.தேனப்பன், காரைக்குடி)

நகை கடை விளம்பரத்துக்கே அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். நகை கடை விளம்பரத்தில் நடித்த ஒரு நடிகை ரூ.5 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் பரவியிருக்கிறது!

***

தமிழ் திரையுலகில் பேய் படங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதற்கு காரணம் என்ன? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி))

பக்தி மற்றும் ஆன்மிகம் தொடர்பான பட தயாரிப்புகள் படிப்படியாக குறைந்து, இப்போது யாருமே பக்தி படங்களை தயாரிப்பதில்லை. இதுவே பேய் படங்களின் ஆக்கிரமிப்புக்கு காரணம் என்று பேசப்படுகிறது!

***

குருவியாரே, அரவிந்தசாமி டைரக்டு செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறாரே...அவர் டைரக்டு செய்யும் படத்தில் கதாநாயகனாக நடிப்பது யார்? (ஏ.சுரேந்தர், காரைக்கால்)

கதாநாயகன் யார்? என்று இன்னும் முடிவு செய்யவில்லையாம். கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கேள்வி!

***

சிவாஜிகணேசனும், ஜெமினிகணேசனும் இணைந்து நடித்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடிய படம் எது? (எஸ்.பி.ராஜபாண்டி, மதுரை)

‘பாசமலர்!’

***

குருவியாரே, இனிமேல் நகைச்சுவை படங்களில் நடிக்க மாட்டேன் என்று நிக்கி கல்ராணி கூறியிருக்கிறாரே...? (வி.ஜெகநாதன், அரக்கோணம்)

அய்யோ...நிக்கி கல்ராணி நடிக்காவிட்டால், தமிழ் பட உலகம் என்ன ஆவது? அவருக்கு மாற்றாக வேறு நடிகை இல்லையே...!

***

டைரக்டர் ஹரி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர், அவர் என்ன படித்து இருக்கிறார், இதுவரை எத்தனை படங்களை டைரக்டு செய்திருக்கிறார்? (என்.நீலகண்டன், மார்த்தாண்டம்)

டைரக்டர் ஹரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. இதுவரை, 14 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். இப்போது இயக்கி வரும் ‘சாமி–2,’ அவருடைய 15–வது படம்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் நடிகராக இருந்து இலக்கியவாதியாக மாறியவர்கள் யாராவது இருக்கிறார்களா? (எஸ்.புவனேஸ்வரி, சென்னை–87)

நடிகராக இருந்து இலக்கியவாதியாக மாறியவர், சிவகுமார் ஒருவர்தான்!

***

நடிகர் பிரசாந்த் நடித்துள்ள ‘ஜானி,’ எந்த மாதிரி கதையம்சம் உள்ள படம்? படத்தை இயக்கியவர் யார், பிரசாந்த் ஜோடியாக நடித்திருப்பவர் யார், படம் எப்போது திரைக்கு வரும்? (எம்.ஜெயராமன், கம்பம்)

‘ஜானி,’ சஸ்பென்ஸ் திகில் படம். இந்த படத்தை இயக்கியவர், ஸ்ரீராம் ராகவன். பிரசாந்த் ஜோடியாக நடித்திருப்பவர், சஞ்சிதா ஷெட்டி. படம், அடுத்த மாதம் (ஜூன்) திரைக்கு வரும்!

***

குருவியாரே, அஞ்சலி அழகாகத்தானே இருந்தார்...அவர் உடல் எடையை குறைக்க என்ன காரணம்? (பி.எம்.அரவிந்த், கும்மிடிப்பூண்டி)

கதாநாயகிகள் இடையே போட்டி கடுமையாக இருக்கிறது. கேரளாவில் இருந்தும், மும்பையில் இருந்தும் புதுசு புதுசாக அழகிகள் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த போட்டிகளை சமாளித்து முன்னணி கதாநாயகியாக நீடித்து இருப்பதற்காகவே அஞ்சலி உடல் எடையை குறைத்து இருக்கிறார்!

***

தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா வசிப்பது சென்னையிலா, ஐதராபாத்திலா? (பி.வெற்றிவேல், குலசேகரபட்டினம்)

அர்ச்சனா, சென்னையில்தான் வசிக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது, அவருடைய வீடு!

***

Next Story