சிறிய படங்கள் வெளிவர தயாரிப்பாளர்கள் சங்கம் உதவி


சிறிய படங்கள் வெளிவர தயாரிப்பாளர்கள் சங்கம் உதவி
x
தினத்தந்தி 20 May 2018 10:15 PM GMT (Updated: 20 May 2018 7:48 PM GMT)

சிறிய படங்கள் வெளிவர தயாரிப்பாளர்கள் சங்கம் உதவி செய்துள்ளது.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“விஷால் தலைமையில் இயங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்களை வெளியிட கமிட்டி உருவாக்கி உள்ளது. அந்த கமிட்டியின் ஆலோசனைப்படி வாரம் எத்தனை படம் வெளியிட வேண்டும் என்பதும் எத்தனை திரையரங்குகள் ஒரு திரைப்படத்துக்கு தர வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்படுகிறது.

45 நாட்கள் திரைத்துறையினர் வேலை நிறுத்தத்துக்கு பிறகு இந்த கமிட்டியின் ஆலோசனைப்படி படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மாதத்தில் ஒருவாரம் சிறிய படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது கமிட்டியின் முடிவாகும். ‘செம போத ஆகாதே’ படத்தை வருகிற 25-ந் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இதனால் அதே நாளில் வெளிவர இருக்கும் 7 சிறிய படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காது என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுபட தயாரிப்பாளர்களுக்காக விஷால் வேண்டுகோளை ஏற்று ‘செம போத ஆகாதே’ படத்தை அதர்வா தள்ளி வைத்துள்ளார்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story