சினிமா செய்திகள்

‘செல்பி’ எடுப்பதை வெறுக்கும் ராதிகா ஆப்தே + "||" + Radhika Apte who hates 'selfie'

‘செல்பி’ எடுப்பதை வெறுக்கும் ராதிகா ஆப்தே

‘செல்பி’ எடுப்பதை வெறுக்கும் ராதிகா ஆப்தே
செல்பி எடுப்பதை வெறுப்பதாக நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

அபிமான நடிகர்-நடிகைகளுடன் செல்பி எடுப்பதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. பட விழாக்கள், கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து நின்று செல்பி எடுக்கின்றனர். விமான நிலையங்களிலும் நடிகர்-நடிகைகளை முற்றுகையிட்டு செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் நடிகர்-நடிகைகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. சிலர் அத்துமீறி உடம்பை தொடுவதும் கையை பிடித்து இழுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதை தவிர்ப்பதற்காக நடிகைகள் பலர் இப்போது பாதுகாப்புக்கு தனியாக பாதுகாவலர்களை சம்பளம் கொடுத்து வைத்துள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், விமான நிலையங்களில் இவர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

செல்பி எடுக்கும் கலாசாரத்தை நடிகை ராதிகா ஆப்தே சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“ரசிகர்களுடன் செல்பி எடுப்பது எனக்கு பிடிக்காது. இப்போது பிரபல நடிகையாக இருப்பதால் இதை சொல்வதாக கருத வேண்டாம். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே இந்த செல்பி பழக்கத்தை வெறுத்தேன். யாராவது செல்பி எடுக்க என்னை நெருங்கினால் அங்கிருந்து விலகி சென்று விடுவேன். இதனால் ரசிகர்களுக்கு மனம் புண்படலாம். அதற்காக எனது கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது.’ இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய கதாநாயகர் ஒருவர் படப்பிடிப்பில் தனது கால்களை உரசி செக்ஸ் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.