“செயின் பறிப்பவர்கள் மூக்கில் குத்துங்கள்” பட விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு


“செயின் பறிப்பவர்கள் மூக்கில் குத்துங்கள்” பட விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு
x
தினத்தந்தி 21 May 2018 10:30 PM GMT (Updated: 21 May 2018 9:26 PM GMT)

விவேக்-தேவயானி நடித்துள்ள புதிய படம் எழுமின். 6 குழந்தைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

விவேக்-தேவயானி நடித்துள்ள புதிய படம் எழுமின். 6 குழந்தைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். வி.பி.விஜி டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் கலந்துகொண்டு பேசும்போது, “நான் அதிரடி நாயகன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன். படத்தில் குழந்தைகள் பிரமாதமாக நடித்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தற்காப்பு கலைகள் கற்று கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து சொல்லி கொடுக்க வேண்டும். நடனம், சினிமாவுக்கு குழந்தைகளை அனுப்புவதை விட தற்காப்பு கலை கற்றுக்கொள்ள அனுப்ப வேண்டும். விவேக் உண்மையை தைரியமாக பேசுவார். அவர் அரசியலுக்கு வந்தால் ஒரு தொகுதிக்கு சிறந்த எம்.எல்.ஏ கிடைப்பார்” என்றார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, குழந்தைகள் தற்காப்பு கலையை படமாக எடுத்தது பெருமையாக இருக்கிறது. செயினை பறிக்கும்போது பெண்கள் எதிர்த்து சண்டை போட்டு திருடர்கள் மூக்கு மேல் குத்த வேண்டும். குழந்தைகளுக்கு தற்காப்பு கலை அவசியம்” என்றார்.

நடிகர் சிம்பு பேசும்போது, “குழந்தைகள் திறமையை பெற்றோர்கள் தட்டி கொடுக்க வேண்டும். என் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். அங்கு விடை சொல்ல வைக்கிறார்களே தவிர திறமையை வளர்ப்பது இல்லை. எனக்கு பேனர் வைத்த ரசிகரை கொன்று விட்டனர். உயிரை பறிக்கும் கட் அவுட்கள் எனக்கு தேவை இல்லை. எனக்கு இனி கட் அவுட் வைக்க வேண்டாம்” என்றார்

நடிகர் விவேக் பேசும்போது, “தமிழ்நாட்டில் கொடிதான் பிரச்சினை. பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள். சமூகத்தில் விளையாட்டில் திறமை இருந்தும் முன்னேற முடியாமல் பலர் உள்ளனர். அவர்களுக்கு இந்த எழுமின் படம் சமர்ப்பணம். நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஷால், கார்த்தி இருவரும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்” என்றார்.

Next Story