சினிமா செய்திகள்

பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் நடிகை சுஷ்மிதா சென் என்ன செய்தார்? + "||" + Sushmita Sen reveals she was molested by 15-year-old at event, here’s what she did

பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் நடிகை சுஷ்மிதா சென் என்ன செய்தார்?

பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன்  நடிகை சுஷ்மிதா சென் என்ன செய்தார்?
நடிகை சுஷ்மிதா சென்னிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவன். அவர் என்ன செய்தார் தெரியுமா?
மும்பை

சுஷ்மிதா சென் 1994-ல் பெமினா மிஸ்.இந்தியா டைட்டில் வென்றார்   இரண்டாம் இடத்தில் வந்தார் ஐஸ்வர்யா ராய். அதே வருடத்தில் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் சுஷ்மிதா வெல்ல, ஏகப்பட்ட பாராட்டு. காரணம் இந்தப் படத்தை வென்ற முதல் இந்திய பெண் இவர்தான்.

சுஷ்மிதா சென் பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகையாக உள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடித்தவர் பிறகு முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது தனக்கு  நேர்ந்த  ஒரு அனுபவத்தை கூறினார். இது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பொதுவாகவே நடிகைகள் என்றால் பார்ப்பவர்களின் கண்ணோட்டம் வேறு விதமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் ஒரு பெண், நான் 25 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். மக்கள் நினைக்கிறார்கள், 'நம் நாட்டில் பெண்களுக்கு என்ன நடக்கும் என்று உங்களுக்கு  தெரியும்? உங்களைச் சுற்றி பாதுகாப்பாளர்கள் உள்ளனர்.  உங்களைப் பாதுகாக்க இங்கு எல்லா வசதிகளும் உள்ளன.  நூற்றுக்கணக்கான நபர்களுடன்  நட்புடன் பழகி உள்ளோம். இந்த நாட்டில் எப்படி நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும், என்னை நம்புங்கள்.

எனக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவத்தை கேளுங்கள்,

6 மாதங்களுக்கு முன் நான் ஒரு விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது.

அந்த நேரத்தில் யாரோ என்னிடம் தவறாக நடந்து கொண்டதை அறிந்தேன். உடனே அந்த கையை பிடித்துவிட்டேன். ஆனால் அதன் பிறகு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

அவன் ஒரு 15 வயது சிறுவன். முதலில் தன் மீது எந்த தவறும் இல்லை எனக்கூறி மறுத்த அவன், பின்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினான். நானும் அவன் வயதை கருத்தில் கொண்டு அறிவுரை கூறி அனுப்பினேன் என தெரிவித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 42 வயது இருக்கும், தனது அம்மாவின் வயதை ஒத்த ஒரு நடிகையிடம், அந்த சிறுவன் இவ்வாறு நடந்து கொண்டது பிறருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீதும் அவர்கள் நடவடிக்கைகள் மீதும், எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். சின்ன அலட்சியம் கூட அவர்களை இது போன்ற அழிவுப்பாதையில் அழைத்து செல்லக்கூடும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என கூறினார்.