சினிமா செய்திகள்

பேய் வேடத்தில் அஞ்சலி + "||" + Respect the ghost anjali

பேய் வேடத்தில் அஞ்சலி

பேய் வேடத்தில் அஞ்சலி
அஞ்சலி, நாடோடிகள்-2 படத்தில் சசிகுமாருடனும் பெயரிடப்படாத படமொன்றில் விஜய்சேதுபதியுடனும் நடித்து வருகிறார்.
அஞ்சலி, நாடோடிகள்-2 படத்தில் சசிகுமாருடனும் பெயரிடப்படாத படமொன்றில் விஜய்சேதுபதியுடனும் நடித்து வருகிறார். இப்போது லிசா என்ற பேய் படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்க ராஜு விஸ்வநாத் டைரக்டு செய்கிறார்.

இதில் அஞ்சலி பேயாக நடிக்கிறார். படத்தில் அவர் எப்படி பேயாக வருகிறார் என்ற தோற்றத்தை இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். திகில் படமாக லிசா உருவாகிறது. ஸ்டீரியோகோபிக் தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய படம் இது என்கின்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

அஞ்சலி ஏற்கனவே பலூன் என்ற பேய் படத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ள காளி படம் திரைக்கு வந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் பேசி வருகின்றனர். தெலுங்கில் கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் திகில் படத்துக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.