சினிமா செய்திகள்

பாலியல் தொல்லையில் சுஷ்மிதா சென் + "||" + Sushmita Sen

பாலியல் தொல்லையில் சுஷ்மிதா சென்

பாலியல் தொல்லையில் சுஷ்மிதா சென்
ஹாலிவுட் நடிகைகள் முதல் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீரெட்டி வரை பாலியல் புகார்களை கூறி பட உலகை பதற வைத்து வருகிறார்கள்.
ஹாலிவுட் நடிகைகள் முதல் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீரெட்டி வரை பாலியல் புகார்களை கூறி பட உலகை பதற வைத்து வருகிறார்கள். இந்தி நடிகைகளும் செக்ஸ் தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்து உள்ளனர். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த சுஷ்மிதா சென்னும் பாலியல் தொந்தரவில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவரே சொல்கிறார்:-

“நடிகைகள் 10 பாதுகாவலர்களுடன் செல்கிறார்கள். இதனால் அவர்களுக்கு மற்றவர்களால் எந்த தொல்லையும் வராது என்று நினைக்கிறார்கள். அது தவறு. பாதுகாப்பையும் மீறி சிலர் தொந்தரவு செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்க சென்று இருந்தேன். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது.

அதில் ஒருவன் என்னிடம் தவறாக நடக்க முயன்றான். அந்த ஆசாமியின் கையை பிடித்து விட்டேன். அவனை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்து. அவன் வயது 15 தான் இருக்கும். தனியாக அழைத்து சென்று அறிவுரை சொன்னேன். போலீசில் புகார் அளித்து இருந்தால் அவன் எதிர்காலம் முடிந்து இருக்கும். இப்படி நடந்து கொள்வது தவறு என்று தெரியாமலேயே அவன் வளர்ந்து இருக்கிறான்.”

இவ்வாறு சுஷ்மிதா கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...