சினிமா செய்திகள்

பிரபல நடிகர் மீது 8 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு மன்னிப்பு கோரினார் + "||" + Morgan Freeman accused of sexual harassment by 8 women

பிரபல நடிகர் மீது 8 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு மன்னிப்பு கோரினார்

பிரபல நடிகர் மீது 8 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு மன்னிப்பு கோரினார்
பிரபல ஹாலிவுட் நடிகர் மீது 8 பெண்கள் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகம் ஒன்று மார்கன் ஃப்ரீமேன் ( வயது 80) தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் 8 பெண்கள் நடிகர் மார்கன் ஃப்ரீமேனுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதில் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, மார்கன் ஃப்ரீமேன் உடனான சந்திப்பின் போது தாம் உள்ளாடை அணிந்துள்ளேனா என கேட்டு, சோதனைக்கு முயன்றதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மார்கன் ஃப்ரீமேன் மீது புகார் அளித்துள்ள 8 பெண்களில் சோலி மேலாஸ் என்ற ஊடகவியலாளர் மட்டும் தமது பெயரை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தாம் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் உடன் நேர்காணல் ஒன்றை நடத்தியதாகவும், அப்போது தாம் 6 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் குறிப்பிட்ட சோலி மேலாஸ் ,  தம்மை அவர் கனிந்த பழம் போன்று இருப்பதாக வர்ணித்ததாகவும், சில ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர்
இந்த குற்றச்சாட்டுக்களை நடிகர் மறுத்து உள்ளார். எனக்கு தெரிந்த எவரும் அல்லது என்னுடன் பணிபுரிந்தவர்களும்கூட நான் வேண்டுமென்றே புண்படுத்தும் விதமாகவோ  அல்லது  எவருக்கும் சிரமமாக இருக்கும் என எனக்குத் தெரியாது,. "சங்கடமான அல்லது அவமதிக்கப்பட்ட உணர்ந்து  எவருக்கும் நான் மன்னிப்புக் கேட்கிறேன் - அது என் நோக்கம் அல்ல. என கூறி உள்ளார்.