உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் | அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம் | இன்று நடைபெற இருந்த மதுரை காமராஜர் பல்கலை. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. | நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்களாகும் - மின்துறை அதிகாரிகள் தகவல் | கடலூர் : கீழப்பெரம்பையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின | தஞ்சை: மல்லிபட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் சேதம். |

சினிமா செய்திகள்

நடிகர் சவுந்தரராஜா திருமணம் + "||" + Actor Soundararaja is married

நடிகர் சவுந்தரராஜா திருமணம்

நடிகர் சவுந்தரராஜா திருமணம்
சசிகுமாரின் சுந்தர பாண்டியன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சவுந்தரராஜா.
சசிகுமாரின் சுந்தர பாண்டியன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சவுந்தரராஜா. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தர்மதுரை, தங்கரதம், ஒரு கனவு போல, திருட்டு பயலே-2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் தமன்னாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. சவுந்தரராஜா-தமன்னா திருமணம் உசிலம்பட்டியில் நேற்று நடந்தது. இதில் உறவினர்களும் திரையுலகினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.