சினிமா செய்திகள்

ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் ஜாமினில் விடுதலை + "||" + Weinstein, seen speaking to his lawyer, will plead not guilty and handed over $1million cash to secure his bail

ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் ஜாமினில் விடுதலை

ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன்  ஜாமினில் விடுதலை
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
நியூயார்க்

பிரபல ஹாலிவுட்  திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன்  . இவர் மீது தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் பெண்கள்   பாலியல் புகார் தெரிவித்து உள்ளனர். திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், சல்மா ஹாயாக்,   குற்றம்சாட்டினர்.

ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை  ஹார்வே தொடர்ந்து மறுத்து வந்தார்.  இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மன் ஹாட்டன்  போலீசார் முன் ஹார்வே வெய்ன்ஸ்டைன்  நேற்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அவரை 10 லட்சம் டாலர் சொந்த ஜாமினில் நீதிமன்றம் விடுதலை செய்தது. தனது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்கவும், செல்லும் இடத்தை கண்காணிக்கும் எலக்ட்ரானிக் பட்டை அணிந்து கொள்ளவும் ஹார்வே வெயின்ஸ்டீன் சம்மதித்துள்ளார்.