சினிமா செய்திகள்

தனுஷ் பட நடிகையிடம் திருட்டு + "||" + Theft of Dhanush film actress

தனுஷ் பட நடிகையிடம் திருட்டு

தனுஷ் பட நடிகையிடம் திருட்டு
தனுசுடன் டிரீம்ஸ், பிரஷாந்துடன் புலன் விசாரணை-2 படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாருல் யாதவ்.
தனுசுடன் டிரீம்ஸ், பிரஷாந்துடன் புலன் விசாரணை-2 படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாருல் யாதவ். ராம்கோபால் வர்மா இயக்கி தமிழ், கன்னட மொழிகளில் வந்த சந்தன கடத்தல் வீரப்பன் படத்திலும் நடித்து இருந்தார். இவர் வாடகை காரில் ஒரு தம்பதியின் திருமண நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெங்களூரு விமான நிலையம் சென்றார்.

பரிசு கொடுக்க விலை உயர்ந்த கைக்கெடிகாரம் ஒன்றை வாங்கி வைத்து இருந்தார். அந்த பரிசு பொருளை எடுக்க மறந்து காரை விட்டு இறங்கி விட்டார். சில நிமிடங்களில் ஞாபகம் வந்து காரை நோக்கி ஓடினார். ஆனால் காரில் பரிசு பொருள் பொட்டலம் இல்லை. மாயமாகி இருந்து.

இதுகுறித்து டிரைவரிடம் கேட்டபோது எனக்கு தெரியாது. நான் பார்க்கவில்லை என்று கூறிவிட்டார். இதுகுறித்து போலீசில் பாருல் யாதவ் புகார் அளித்தார். போலீசார் டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர்தான் கைக்கெடிகாரத்தை திருடியது தெரியவந்தது. அதை மீட்டு பாருல் யாதவிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பாருல் யாதவ் டிரைவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...