சினிமா செய்திகள்

காலா படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியீடு + "||" + kala new trailer will be released today evening at 7 pm

காலா படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியீடு

காலா படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது. #kaala
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் உருவாகி உள்ளது. காலா படத்தை ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்து இருக்கிறார். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹீமா குரோசி நடித்துள்ளார். இந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ரவி காலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். 

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு, வெளியாகும் படம் என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காலா படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலா படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 9 (மே மாதம்) ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

காலா படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தகவலை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். 
தொடர்புடைய செய்திகள்

1. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் வெளியானது : படக்குழுவினர் அதிர்ச்சி
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ‘பேட்ட’ என்று பெயர் வைத்துள்ளனர். ரஜினிகாந்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
2. ரசிகர்களை சந்திக்கும் தனுஷ்
நடிகர்கள் ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த ஆரம்பித்துள்ளனர். கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி விட்டார்.
3. ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
4. பெங்களூருவில் ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம்
பெங்களூருவில் ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் அடைந்தார்.
5. ரஜினிகாந்த் படத்தில் நடிப்பதற்காக ‘‘திரிஷா, புதிய தோற்றத்துக்கு மாறினார்
கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் திரிஷா, புதிய தோற்றத்துக்கு மாறிஇருக்கிறார்.