சினிமா செய்திகள்

‘சர்வர் சுந்தரம்’ படத்தில்“இதுவரை பார்த்திராத சந்தானத்தை பார்க்கலாம்” + "||" + Ever seen Let's see Santhanam

‘சர்வர் சுந்தரம்’ படத்தில்“இதுவரை பார்த்திராத சந்தானத்தை பார்க்கலாம்”

‘சர்வர் சுந்தரம்’ படத்தில்“இதுவரை பார்த்திராத சந்தானத்தை பார்க்கலாம்”
சந்தானம் கதைநாயகனாக நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘சர்வர் சுந்தரம்.’
 ‘சர்வர் சுந்தரம்’  காமெடி படம் அல்ல. குடும்ப படம். சூழ்நிலை ஒருவரை எப்படியெல்லாம் மாற்ற முடியும்? என்பதே படத்தின் கரு. 

இதுவரை சிரிக்க வைத்த சந்தானம், இந்த படத்தில் எல்லோரையும் அழ வைத்து விடுவார். இதுவரை பார்த்திராத சந்தானத்தை பார்க்கலாம்” என்கிறார், படத்தின் டைரக்டர் ஆனந்த் பால்கி. படத்தை பற்றி அவர் மேலும் கூறுகிறார்:-

“சர்வர் சுந்தரம், நாகேஷ் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம். இந்த படத்துக்கு அந்த பெயரை வைத்தபோது, சந்தானம் தயங்கினார். “அந்த ‘டைட்டிலுக்கு’ நம்ம படம் தகுதியாக இருக்குமா? கவனமாக பார்த்து செய்யுங்க” என்று கூறினார். படத்தில், 1,000 துணை நடிகர்களுடன் சந்தானம் நடித்த ஒரு காட்சி இடம் பெறுகிறது. அதில் சந்தானம் ஒரே ‘ஷாட்’டில் நடித்து அனைவரையும் கைதட்ட வைத்தார்.

நாகேசின் நினைவாக அவரைப் போலவே இருக்கும் அவருடைய பேரன் விஜேஷ் நாகேசை, இந்த படத்தில் நடிக்க வைத்து இருக்கிறோம்” என்கிறார், டைரக்டர் ஆனந்த் பால்கி. 

ஆசிரியரின் தேர்வுகள்...