பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்


பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார்
x
தினத்தந்தி 29 May 2018 5:23 PM GMT (Updated: 29 May 2018 5:23 PM GMT)

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் சென்னையில் காலமானார். #RIPMukthaSrinivasan

சென்னை,

பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் சென்னையில் காலமானார்.  வயது 88.  முக்தா சீனிவாசன் அக்டோபர் 31, 1929-ல் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்பட பலம்பெரும்  இயக்குநர் ஆவார். சிவாஜி, முத்துராமன், ஜெமினிகணேஷ், ஜெயசங்கர், போன்ற நடிகர்களின் படங்களை இயக்கி தயாரித்துள்ளார். ஜெயலலிதாவின் 100-ஆவது படமான ‘சூர்யகாந்தி’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார். இவர் இயக்குனர் மட்டுமன்றி சிறந்த எழுத்தாளரும் ஆவார்

முக்தா சீனிவாசன், திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும், நூல்களையும், ஆங்கிலத்திலும், தமிழிலும், எழுதியுள்ளார். 1994இல் தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை தமிழ் திரைப்பட வரலாறு என்ற தலைப்பில் தொகுத்துள்ளார்.

மேலும் முதலாளி திரைப்படத்திற்காக தேசிய விருது, பலப்பரிட்சை - தமிழக அரசின் 1977-78க்கான சிறந்த திரைப்பட விருது, 1981-82 கீழ் வானம் சிவக்கும்' - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட விருது, பரிட்சைக்கு நேரமாச்சு - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட இயக்குநர் விருது ஆகியவற்றை  பெற்றவர் ஆவார்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் முக்தா சீனிவாசன்  இன்று காலமானார். 

Next Story