சினிமா செய்திகள்

சினிமாவில் 40 ஆண்டுகள் நீடித்து சாதனை: மூத்த நடிகர்களை பாராட்டிய அனுஷ்கா + "||" + Anushka who praised senior actors for the 40 years in cinema

சினிமாவில் 40 ஆண்டுகள் நீடித்து சாதனை: மூத்த நடிகர்களை பாராட்டிய அனுஷ்கா

சினிமாவில் 40 ஆண்டுகள் நீடித்து சாதனை: மூத்த நடிகர்களை பாராட்டிய அனுஷ்கா
சினிமாவில் 40 ஆண்டுகள் நீடித்து சாதனை படைத்த மூத்த நடிகர்களை அனுஷ்கா பாராட்டியுள்ளார்.

அனுஷ்கா 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இன்னும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. பொருத்தமான வேடத்தில் நடிக்க கதை கேட்கிறார். இத்தனை காலம் படங்களில் நடிப்பதற்கு ரசிகர்கள்தான் காரணம் என்றார் அவர். இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது:-

“நடிகர்கள்-நடிகைகள் சினிமாவில் நடிக்கலாம். திறமையை வெளிப்படுத்தலாம். ஆனால் ரசிகர்கள் ஆதரவு இருந்தால்தான் நடிப்புக்கு மரியாதை கிடைக்கும். அவர்களுக்கு பிடிக்காவிட்டால் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை. எனக்கு ரசிகர்கள் ஆதரவு நிறையவே இருக்கிறது. அருந்ததி, பாகுபலி, பாகமதி படங்களுக்கு பிறகு திறைமையான நடிகை என்று என்னை கொண்டாடினார்கள்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க தகுதியானவளாகவும் என்னை பார்த்தனர். அதனால்தான் எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து வந்து இருக்கிறது. முந்தைய காலத்தில் 30, 40 ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடித்தவர்களை நினைக்கும்போது பெருமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இப்போதுள்ள வசதிகள் அந்த காலத்து நடிகர்களுக்கு இல்லை.

மிகவும் கஷ்டப்பட்டுத்தான் திறமையை நிரூபித்து நிலைத்து இருந்துள்ளனர். அவர்களுடன் ஒப்பிடும்போது நானோ இப்போதுள்ள மற்ற நடிகர்-நடிகைகளோ சாதாரணமானவர்கள். நாங்கள் படுகிற கஷ்டமும் குறைவுதான். இப்போது ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தால் போதுமானது.” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்கார் சினிமா பட பேனர்கள் அகற்றம்: நகராட்சி ஆணையர் அலுவலகத்தை விஜய் ரசிகர்கள் முற்றுகை
சர்கார் சினிமா பட பேனர்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
2. சர்ச்சைக்குரிய காட்சிகள் ஏற்புடையது அல்ல: சினிமா துறையினர் கவனத்துடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
சர்ச்சைக்குரிய காட்சிகள் என்பது ஏற்புடையது அல்ல என்றும், சினிமா துறையினர் திரைப்படங்களை எடுப்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
3. திருப்பூரில் கின்னஸ் சாதனை படைத்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூரில் விரல் நகத்தில் துளையிட்டு 22½ கிலோ பளுவை தூக்கி கின்னஸ் சாதனை படைத்த வாலிபர் குடிபோதையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. நவீன சிகிச்சை மூலம் டிரைவருக்கு மூளையில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்; தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
நவீன சிகிச்சை மூலம் டிரைவருக்கு மூளையில் இருந்த புற்று நோய் கட்டியை அகற்றி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
5. கின்னஸ் சாதனைக்காக தலைமுடியால் காரை 100 மீட்டர் தூரம் இழுத்த 3-ம் வகுப்பு மாணவி
பட்டுக்கோட்டை அருகே கின்னஸ் சாதனைக்காக தலைமுடியால் 100 மீட்டர் தூரம் காரை 3-ம் வகுப்பு மாணவி இழுத்து சென்றார். 890 கிலோ எடை உள்ள காரை 77 வினாடிகளில் இழுத்து முடித்த இந்த மாணவியை பொதுமக்கள் பாராட்டினர்.