சினிமா செய்திகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே-ரஜினிகாந்த் + "||" + district collector's office, Sterlite factory burned out There are no civilians Social enemies - Rajinikanth

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே-ரஜினிகாந்த்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே-ரஜினிகாந்த்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளையும் எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே என ரஜினிகாந்த் கூறினார். #Rajinikanth #SterliteProtest
தூத்துக்குடி 

பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு ரஜினிகாந்த் நிருபர்களூக்கு பேட்டி அளித்தார் அப்போது  அவர் கூறியதாவது:-

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள்  மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சில போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன; எனவே மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார். தற்போது  தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே. உளவுத்துறை தோல்வியால் தூத்துக்குடியில் வன்முறை ஏற்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போலீசை மட்டும் குற்றம் கூறுவது ஏற்புடையதல்ல; மக்களுக்கு பாதுகாப்பு தருவதும் அவர்கள்தான். ஆலையை திறக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது.

பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.  தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை.

எல்லாத்திற்கும்  ராஜினாமா கேட்பது நியாயம் ஆகாது. எந்த பிரச்சினைக்கும் ராஜினாமா செய்வது என்பது தீர்வாகாது. ஸ்டெர்லைட் ஆலையை எந்த அரசு வந்தாலும் திறக்க கூடாது என கூறினார்.

ஏதாவது பிரச்சினை என்றால் போராட கூடாது நீதிமன்றத்தை நாட வேண்டும்.  எப்போதும் போராடினால் மாநிலத்திற்கு தொழில் வாய்ப்பு வராது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படும் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியீடு
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
2. ‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படம் ரூ.450 கோடியில் தயாராவதாக கூறப்பட்டது. தற்போது ரூ.542 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
3. பாஜக ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசையை பார்த்து முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்
பாஜக ஆட்சிக்கு எதிராக விமானத்தில் தமிழிசையை பார்த்து முழக்கமிட்ட சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
4. தூத்துக்குடியில் போலீஸ் தேர்வுக்கு உடற்கூறு தகுதி தேர்வு தொடங்கியது
தூத்துக்குடியில் நேற்று போலீஸ் தேர்வுக்கான உடற்கூறு தகுதி தேர்வு தொடங்கியது. தேர்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
5. ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார்.