சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார் + "||" + Cinema Question-Answer! : Kuruviyar

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, சிவகார்த்திகேயன் ஒரு படத்துக்கு பாட்டு எழுதியிருக்கிறாராமே...அது எந்த படத்துக்காக? அந்த படத்தின் கதாநாயகன் யார்? டைரக்டர் யார்? (இரா.ராதாகிருஷ்ணன், மேட்டூர்)

சிவகார்த்திகேயன் பாட்டு எழுதியது, ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக...! அந்த படத்தில் கதாநாயகன்–கதாநாயகி கிடையாது. கதைநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். நெல்சன் டைரக்டு செய்கிறார்!


***

ஓவியா, இப்போது தனது சம்பளத்தை ஒரேயடியாக கூட்டி விட்டாராமே...? (ஏ.சுரேந் திரபாபு, கும்மிடிப்பூண்டி)

கூட்டிய சம்பளத்தை குறைத்துக்கொள்ளும்படி ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், குறைத்துக்கொள்கிறாராம்!

***

குருவியாரே, அஞ்சலிக்கு ஆந்திராவில் யாரோ அடைக்கலம் கொடுத்திருக்கிறாராமே... அதுபோல் தமிழ்நாட்டிலும் அவருக்கு அடைக்கலம் தர ஆள் இருக்கிறதா? (கே.எஸ்.அரவிந்த் செல்வா, புதுச்சேரி)

அஞ்சலிக்கு தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்த ஊருக்கு போனாலும், அவருக்கு அடைக்கலம் கொடுக்க ரசிகர்கள் இருக்கிறார்களாம்!

***

குருவியாரே, நகைச்சுவை நடிகர் யோகிபாபு எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் சாயிபாபாவின் பக்தரா? அவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் யார்? (வி.ஜெயசீலன், மன்னார்குடி)

யோகிபாபு, சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர். அவர் ஒரு தீவிர முருக பக்தர். (அடிக்கடி திருத்தணி முருகன் கோவிலில் பார்க்கலாம்.) அவரை ‘யோகி’ படத்தில் அறிமுகம் செய்தவர்கள்: டைரக்டர் அமீரும், சுப்பிரமணியசிவாவும்...!

***

குருவியாரே, விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்? (ஸ்ரீதேவி, வேலூர்)

தனது முன்னோடிகள் இரண்டு பேரின் அரசியல் பிரவேசங்களை கூர்மையாக கவனித்து வரும் விஜய், அவர்களின் வழித்தடங்களை பின்பற்றி அரசியலுக்கு வர திட்டமிட்டு இருக்கிறாராம்!

***

குருவியாரே, அஜித்-சிவா கூட்டணியில் உருவாகும் ‘விசுவாசம்’ படம் எப்போது வெளிவரும்? (டி.ராஜன், கோச்சடை)

‘விசுவாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட படப் பிடிப்பை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டு இருக் கிறார்கள். வெளிநாட்டு படப்பிடிப்பு முடிவடைந்ததும் எடிட்டிங், டப்பிங், ரீரிக்கார்டிங் ஆகிய பணிகளுக்காக 2 மாதங்கள் ஒதுக்கப்படும். அதன் பிறகே படத்தின் ‘ரிலீஸ்’ தேதி முடிவாகும்!

***

கவர்ச்சி நடிகை சோனா இப்போது எப்படியிருக்கிறார்? (எஸ்.தினேஷ், திருச்சி)

வருடங்கள் ஓடி வயது கூடினாலும், சோனாவிடம் இன்னமும் கவர்ச்சி மிச்சம் இருக்கிறதாம்!

***

‘நெடுஞ்சாலை’ பட புகழ் சிவதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவர் எங்கே- என்ன செய்து கொண்டிருந்தார்? (டி.வி.அந்தோணிராஜ், கோவை)

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, சிவதா திருச்சியில் படித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயர், முரளி கிருஷ்ணன். இவரும் மலையாள படங் களில் நடித்து வருகிறார்!

***

“அத்தான்...என்னத்தான்...” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடல் காட்சியில் நடித்தவர்கள் யார்? (ஜெ.மார்த்தாண்டன், நாகர்கோவில்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘பாவமன்னிப்பு.’ பாடல் காட்சியில் நடித்தவர்கள்: சாவித்ரி-தேவிகா!

***

‘நடிகையர் திலகம்’ படத்தில் ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மானின் நடிப்பு எப்படி? (எல்.விஜயகுமார், விருதுநகர்)

ஜெமினிகணேசனின் ‘ஸ்டைல்’ கொஞ்சம் கூட, அவரிடம் இல்லை. எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்டார்!

***

குருவியாரே, எமிஜாக்சனுக்கும், டாப்சிக்கும் கவர்ச்சி போட்டி வைத்தால்...? (ஏ.அப்துல் காதர், ஆற்காடு)

டாப்சியை எமிஜாக்சன் ஊதி தள்ளி விடுவாராம்!

***

குருவியாரே, நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமான படம் எது? தமிழில் அவர் நடித்த முதல் படம் எது? (டி.தனசேகரன், நெய்வேலி)

ஹன்சிகா மோத்வானி குழந்தையாக இருந்தபோதே சினிமாவுக்கு அறிமுகமாகி விட்டார். குழந்தை நட்சத்திரமாக 5 இந்தி படங்களில் நடித்தார். தமிழில் அவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம், ‘மாப்பிள்ளை!’

***

குருவியாரே, அரவிந்தசாமி-அமலாபால் நடித்து வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் கதை, பழைய படங்களில் பார்த்து ரசித்ததுதானே..? (பி.சந்தோஷ், சென்னை-1)

குறிப்பாக, ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் பார்த்து ரசித்த கதைதான். அந்த கதை இங்கிருந்து கேரளாவுக்கு போய் அங்கிருந்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்து இருக்கிறது!

***

‘ஒரு குப்பை கதை’யில் கதாநாயகனாக நடித்த டான்ஸ் மாஸ்டர் தினேஷ், தொடர்ந்து படங்களில் நடிப்பாரா? (டி.ஜேக்கப், வேலூர்)

அவர் உயரத்துக்கு பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் வந்தால், நடிப்பை தொடர்வாராம்!

***

ராமராஜன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? (கே.சிவா, மதுரை-9)

அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசி வரு கிறார்!

***

குருவியாரே, வடிவேல் சென்னைக்கும், மதுரைக்கும் இடையே அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறாரே...அது படப்பிடிப்புக்காகவா? (சோ.தட்சிணாமூர்த்தி, குரோம்பேட்டை)

வடிவேலுவின் சொந்த ஊர், மதுரை. அவருடைய தாயார் அங்கேதான் வசிக்கிறார். குலதெய்வம் கோவிலும் அங்கேதான் இருக்கிறது. அம்மாவை பார்க்கவும், குலதெய்வத்தை கும்பிடவும் வடிவேல் மதுரைக்கு அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறார்!

***

டைரக்டர் விக்னேஷ் சிவன் கதாநாயகனாக நடிக்கப் போகிறாராமே...அது உண்மையா? அவரை இயக்கும் டைரக்டர் யார்? (எஸ்.ஹரிகிருஷ்ணன், கோணலூர்)

விக்னேஷ் சிவன் கதாநாயகனாக நடிக்கப்போவது உண்மைதான். அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ராஜேஷ் எம். டைரக்டு செய்வது உறுதியாகி இருக்கிறது!

***

காஜல் அகர்வால் இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லையே...எப்படி? (சி.சசிகுமார், தேனி)

அவருடைய பெரிய பல் வரிசை ஒரு காரணமாக இருக்கலாம்!

***

குருவியாரே, ‘சின்னத்திரை’க்கு போன ரேவதிக்கு அங்கே வரவேற்பு எப்படியிருக்கிறதாம்? (ஜி.மீனா, சிவகாசி)

அவரை அங்கே ரேவதி என்று யாரும் அழைப்பதில்லை. ‘அழகம்மா’ என்றும், செல்லமாக ‘அழகு’ என்றும் அழைக்கிறார் களாம். அந்த அளவுக்கு அவருடைய ‘அழகம்மா’ கதாபாத்திரம் பிரபலமாகி விட்டது!

***