சினிமா செய்திகள்

மூச்சுத்திணறலால் அவதி - நடிகை பிபாசா பாசு ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + Actress Bipasha Basu is admitted to hospital

மூச்சுத்திணறலால் அவதி - நடிகை பிபாசா பாசு ஆஸ்பத்திரியில் அனுமதி

மூச்சுத்திணறலால் அவதி - நடிகை பிபாசா பாசு ஆஸ்பத்திரியில் அனுமதி
மூச்சுத்திணறல் காரணமாக நடிகை பிபாசா பாசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு. இவருக்கு 39 வயது ஆகிறது. தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி இருக்கிறார். பிபாசா பாசுக்கு ஆரோக்கிய விஷயங்களில் ஆர்வம் உண்டு.


உடற்பயிற்சிகள் யோகாவை தினமும் தவறாமல் செய்து உடம்பை கட்டுகோப்பாக வைத்து இருந்தார். இவருக்கு சமீபத்தில் மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு மூச்சுத்திணறல் கடுமையாக இருந்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிபாசா பாசு உடல் நிலையில் மேலும் சில கோளாறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நோய் பாதிப்பு குறித்த தகவல்களை குடும்பத்தினர் வெளியிடவில்லை.

ஆசிரியரின் தேர்வுகள்...