சினிமா செய்திகள்

நயன்தாரா, அனுஷ்கா படங்களை இயக்கிய டைரக்டர் கிரிஷ் விவாகரத்து? + "||" + Director Krish's divorce directed by Nayantara and Anushka's films?

நயன்தாரா, அனுஷ்கா படங்களை இயக்கிய டைரக்டர் கிரிஷ் விவாகரத்து?

நயன்தாரா, அனுஷ்கா படங்களை இயக்கிய டைரக்டர் கிரிஷ் விவாகரத்து?
டைரக்டர் கிரிஷ் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல டைரக்டர் கிரிஷ், தனது மனைவி ரம்யாவை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் 2016 ஆகஸ்டு மாதம் நடந்தது. ரம்யா டாக்டராக இருக்கிறார். 1 வருடம் 9 மாதங்கள் சேர்ந்து குடும்பம் நடத்திய இவர்கள் இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய முடிவு செய்துள்ளனர்.

குடும்பத்தினர் மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வி அடைந்ததாகவும் எனவே இருவரும் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு பிறகே இவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். சிம்பு, அனுஷ்கா நடித்து தமிழில் வெளிவந்த ‘வானம்’ படத்தை கிரிஷ் டைரக்டு செய்து இருந்தார். தெலுங்கில் பாலகிருஷ்ணா, ஸ்ரேயா நடித்த கவுதமி புத்ர சாதகர்னி என்ற சரித்திர படத்தை டைரக்டு செய்தார். இந்த படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

ராணா, நயன்தாரா நடித்து திரைக்கு வந்த ‘கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்’ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கினார். தற்போது இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள மணிகர்ணிகா படத்தையும் டைரக்டு செய்துள்ளார். அடுத்து பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதை படத்தையும் இயக்குகிறார்.

கிரிஷ் விவாகரத்து தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரிஷ் இயக்கிய ‘கஞ்சே’ தெலுங்கு படத்தில் கதாநாயகியாக பிரக்யா ஜெய்ஸ்வால் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவருக்கும் கிரிஷுக்கும் நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதுவே விவாகரத்துக்கு காரணம் என்றும் தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது.