சினிமா செய்திகள்

காவிரியை விட ’காலா’ முக்கியமல்ல - கமல்ஹாசன் + "||" + More than Cauvery 'kaala' is not importantKamal

காவிரியை விட ’காலா’ முக்கியமல்ல - கமல்ஹாசன்

காவிரியை விட ’காலா’ முக்கியமல்ல - கமல்ஹாசன்
காவிரியை விட ’காலா’ முக்கியமல்ல ரஜினிகாந்துக்கு எதிராக கமல்ஹாசன். #kaala #KamalHassan #Rajinikanth
சென்னை

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்காக வரைவு திட்டம் உருவாக்கப்பட்டு அது மத்திய அரசின் அரசிதழிலும் வெளியாகியது.

இந்நிலையில், காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு சென்றார். இதையடுத்து, இன்று காலை அவர் குமாரசாமியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திலை வைத்து நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கமல் கூறியதாவது,

"நான் மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளேன். நாங்கள் காவிரி உட்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம். இது கூட்டணிக்கான சந்திப்பு கிடையாது. குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது. அதனால், தண்ணீர் திறக்க நினைவூட்ட வந்துள்ளேன்.

காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. என்னை கேட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம்" என்றார்.

அப்போது குமாரசாமி கூறியதாவது:-

"இருமாநிலங்களிலும் விவசாயிகள் இருக்கிறார்கள். அதனால், இருமாநில விவசாயிகளையும் பாதிக்காதவாறு தமிழக அரசுடன் பேச்சு நடத்தி  முடிவு எடுக்கப்படும்" என்றார்.




தொடர்புடைய செய்திகள்

1. இவ்வளவு வெறுப்புணர்வு கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருக்கிறது - நடிகர் சூர்யா
இவ்வளவு வெறுப்புணர்வு கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருந்தது என நடிகர் சூர்யா எழுதி உள்ள கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.
2. கஜா புயல் பாதிப்பு: நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.#GajaCyclone
3. எம்.பி., எம்.எல்.ஏக்களால் எப்படி டி.வி சேனலை தொடங்க முடிகிறது? -நடிகர் விஷால் கேள்வி
புதிதாக ஒரு செய்தி சேனலை உருவாக்க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
4. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth
5. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு?
கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம் இந்தியன். 1996-ல் வெளியான இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருவை கொண்டது.